ஆப்நகரம்

3வது முறையாக மீண்டும் ஜோடி சேர்ந்த நகுல் - சுனைனா ஜோடி!

நகுல் - சுனைனா ஜோடி நீண்ட நாள் கழித்து தற்போது பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

Samayam Tamil 6 Sep 2018, 7:34 pm
நகுல் - சுனைனா ஜோடி நீண்ட நாள் கழித்து தற்போது பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.
Samayam Tamil masilamani


நடிகர் நகுல், ‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னர் ‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப்படத்தில்தான் நடிகை சுனைனா நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இடம் பெற்ற நாக்க முக்க என்ற பாடல் ஹிட்டானதால் ‘காதலில் விழுந்தேன்’ படமும் ஹிட்டானது.

‘காதலில் விழுந்தேன்’ படத்தை அடுத்து நடிகர் நகுல், ‘மாசிலாமணி’ படத்தில் நடித்தார். இந்தப் படத்திலும் நகுலுக்கு ஜோடியாக - சுனைனா நடித்தார். அதன் பின் இந்த ஜோடி எந்தப் படத்திலும் சேரவில்லை. மேலும் இவர்களுக்கு அதிகமான பட வாய்ப்புகள் இல்லையே என்றே சொல்லலாம். தற்போது சுனைனா ‘எனை நோக்கி பாயும் தோட்டம்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் சச்சின் தேவ் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் நகுல் மற்றும் சுனைனாவுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படம் அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவிருக்கிறது. நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ‘செய்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்