ஆப்நகரம்

‘இன்றைய காதல் டா’ படத்தில் லேடி டானாக நடிக்கும் நமீதா!

டி.ராஜேந்தர் இயக்கத்தில் மூன்று மொழிகளில் வெளியாகும் ‘இன்றைய காதல் டா’ படத்தில் நடிகை நமீதா லேடி டானாக நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 11 Jul 2018, 6:59 pm
டி.ராஜேந்தர் இயக்கத்தில் மூன்று மொழிகளில் வெளியாகும் ‘இன்றைய காதல் டா’ படத்தில் நடிகை நமீதா லேடி டானாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil namitaa


டி.ராஜேந்தர் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘இன்றைய காதல் டா’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் என அனைத்தையும் அவரே கவனிக்கவுள்ளார்.

இந்தப் படம் குறித்து டி.ஆர். செய்தியாளர்களிடம கூறுகையில், “சிம்பு சினி ஆர்ட்ஸ்” நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் ‘இன்றைய காதல் டா’ படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகை நமீதா வித்தியசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் படத்தில் ராதாரவி, இளவரசன், வி.டி.கணேஷ், வெ. ஆ. மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாபு, ‘கவண்’ ஜெகன், சுரேஷ், ராஜப்பா, கொட்டாச்சி, தியாகு போன்ற எண்ணற்ற நகைச்சுவை பட்டாளங்கள் நடிக்கிறார்கள்’’ என்றார் டி.ராஜேந்தர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்