ஆப்நகரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறார் நமீதா?

நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியறேவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Samayam Tamil 6 Jul 2017, 5:01 pm
நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியறேவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Samayam Tamil namita will quit form biggboss programm
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறார் நமீதா?


நடிகர் கமல்ஹாசன் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள் உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நடிகர் ஸ்ரீ முதலில் வெளியேறினார். அவருக்கு அடுத்து நடிகை அனுயா விடைபெற்றுச் சென்றார். அடுத்ததாக யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் ஜூலி, பரணி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் திடீர் திருப்பமாக, இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்காக நடிகை நமீதா, தன்னுடைய பொருட்களை பேக் செய்யும் வீடியோவை விஜய் டிவி இன்றைய புரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்