ஆப்நகரம்

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறார் நமீதா

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இந்த வாரம் நமீதா வெளியேறுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TNN 23 Jul 2017, 10:53 am
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இந்த வாரம் நமீதா வெளியேறுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil namitha eliminated this week biggbosstamil
இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறார் நமீதா


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது. வாரந்தோறும் மக்கள் வாக்கெடுப்பைக் கொண்டு வெளியேறும் நபர் தேர்வு செய்யப்படுகிறது. இந்த வாரத்திற்கான வெளியேற்ற வாக்கெடுப்பில் கணேஷ், ஓவியா, நமீதா ஆகியோர் உள்ளனர்.

ஓவியாவை வெறியேற்று எண்ணத்தில் இருந்த குடும்ப உறுபினர்களுக்கு கமல் நேற்று குறும்படம் ஒன்றை போட்டு காண்பித்தார். ஜுலியின் நாடகத்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓவியாவை தவறாக நினைத்தனர். எனவே ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். இன்று சனிக்கிழமை எனபதால் கமல் இந்த வாரம் என்ன நடத்தது என்பதை அனைவரிடம் கேட்டறிந்தார். இதன் பிறகு ஓவியா தவறு இல்லாதவர்.ஜுலி தான் ஒன்றுமில்லாத பிரச்சனையை ஊதி பெருசாக்கினார் என்பதை குடும்ப உறுப்பினர்கள் உணர்தனர்.

#BiggBossTamil #Namitha to be eliminated @KHFollowers @UNKHOurPride @KamalismForever @DiehardKamalian @UlagaNayaganFan @UlaganayaganFC pic.twitter.com/t09cHyP1jp — ℓσкεsн ∂εsιgηs (@lokesh_MIT) July 23, 2017 ஏவிக்கஷன் லிட்டில் இருந்த ஓவியாவை மக்கள் அதிக வாக்களித்து காப்பாத்தினார்கள். இந்த வாரம் வெளியேறப்போவது கணேஷா? அல்லது நமீதாவா ? என்ற கேள்வி எழுந்தது . இந்தநிலையில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இந்த வாரம் நமீதா வெளியேறுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்