ஆப்நகரம்

தெலுங்கில் ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுக்க தயாராகும் நந்திதா!

தெலுங்கு படங்களில் நடித்து வரும் நந்திதா தற்போது ஆடைகளுக்கு சுந்திரம் கொடுக்க தயாராகி விட்டதாக தெரிகிறது.

TNN 18 Nov 2016, 5:44 pm
சென்னை: தெலுங்கு படங்களில் நடித்து வரும் நந்திதா தற்போது ஆடைகளுக்கு சுந்திரம் கொடுக்க தயாராகி விட்டதாக தெரிகிறது.
Samayam Tamil nandita gives importance to her costumes
தெலுங்கில் ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுக்க தயாராகும் நந்திதா!


நடிகை நந்திதா தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது பூர்வீகம் பெங்களூர். தமிழில் ‘அட்டகத்தி’ படம மூலம் அறிமுகமானார். இவரை அறிமுகப்படுத்தியர் பா.ரஞ்சித். முதல் படமே வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து தமிழில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் பிஸியாக இருந்ததால் தாய்மொழியான கன்னடத்தில் நடிக்க முயற்சி செய்யவில்லை. தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ‘உள்குத்து’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சில மாதங்களாக ஐதராபாத்தில் முகாமிட்டு வாய்ப்பு தேடி வந்தார் நந்திதா. அதன் பயனாக ‘எக்கடிக்கு பொத்தவ சின்னவட’ -என்ற படத்தில் நிகில் சித்தார்த்துக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக தற்போது சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நந்திதா, தற்போது தெலுங்கில் ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். அதனால் அவரைத் தேடி புதிய படங்கள் அதிகம் வருகின்றன. அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் நந்திதா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்