ஆப்நகரம்

அரவிந்த் சாமியுடன் இணையும் நந்திதா!

அரவிந்த் சாமியுடன் இணையும் நந்திதா!

TOI Contributor 1 Feb 2017, 3:29 am
புதையல், நான் அவன் இல்லை போன்ற படங்களை இயக்கிய செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது அந்தப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அட்டக்கத்தியில் நடித்த நந்திதா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. அரவிந்த் சாமி போலீசாக நடிக்க இருக்கும் இந்தப்படத்தில் நந்திதாவிற்கும் முக்கிய கதாப்பாத்திரம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு ஹீரோயின் இல்லாமல் மூன்றாவதாகவும் ஒரு முக்கிய பெண் கதாப்பாத்திரம் படத்தில் உள்ளது. அதற்கான நடிகை தேர்வு நடந்து வருகிறது.
Samayam Tamil nandita in arvind swamis cop flick with selvaa
அரவிந்த் சாமியுடன் இணையும் நந்திதா!

தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்த தம்பி ராமையாவும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு வணங்காமுடி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்