ஆப்நகரம்

‘ஐபிசி 376’ : போலீஸ் கெட்டப்பில் மிரட்ட வரும் ‘அட்டகத்தி’ நந்திதா!

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, தற்போது ‘ஐபிசி 376’ என்ற படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார்.

Samayam Tamil 6 Mar 2019, 4:43 pm
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் ‘அட்டகத்தி’. இந்தப் படத்தில் நடிகர் தினேஷ் மற்றும் நடிகை நந்திதா ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். இந்தப் படத்தை அடுத்து நந்திதா, விஜய் சேதுபதியுடன் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் சிவகார்த்திகேயனுடன் ‘எதிர்நீச்சல்’, விஷ்ணு விஷாலுடன் ‘முண்டாசுப்பட்டி’ ‘நலனும் நந்தினியும்’, ‘புலி’, ‘அஞ்சல’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil IPC


இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஐபிசி 376’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை ராம்குமார் சுப்புராமன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தை பிரபாகர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்