ஆப்நகரம்

Dasara Review: நானியின் 'தசரா' படம் ஒர்த்தா.? இல்லையா.?: முழு விமர்சனம் இதோ.!

சிம்புவின் 'பத்து தல' படத்துக்கு போட்டியாக நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தசரா' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 30 Mar 2023, 7:37 pm
தெலுங்கு நடிகராக இருந்தாலும் வெப்பம், நான் ஈ, ஆஹா கல்யாணம் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நானி. இவரும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடித்த 'தசரா' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படம் குறித்து இணையத்தில் ரசிகர்கள் அளித்துள்ள விமர்சனங்களில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.
Samayam Tamil தசரா
தசரா


தெலுங்கிலிருந்து ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற புஷ்பா, ஆர் ஆர் ஆர் படங்களை போல் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது 'தசரா'. ஸ்ரீகாந்த் ஓடேலா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நானியும், கீர்த்தியும் இணைந்து நடித்துள்ளனர். நேனு லோக்கல் என்ற படத்தில் இணைந்த இந்த வெற்றிக்கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக 'தசரா' படத்தில் இணைந்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள 'தசரா' படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. அதிகாலை முதலே இந்தப்படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

'தசரா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. நானியின் நடிப்பு வேறலெவலில் இருப்பதாகவும், சாக்லெட் பாயாக பார்த்த அவர் இந்தப்படத்தில் வேறு ஒரு பரிமாணத்தில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போயுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நரிக்குறவர் சமுதாய மக்களை அனுமதிக்காத ரோகிணி தியேட்டர்: கொந்தளித்த ஜிவி பிரகாஷ்.!

மேலும் ஆக்ஷன் மற்றும் செண்டிமென்ட் காட்சிகள் படத்தின் திரைக்கதையுடன் பக்காவாக பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மொத்தத்தில் பக்கவான கமர்ஷியல் பேக்கேஜாக 'தசரா' படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Actress Sana: ஒரு பெண் எப்படி ஆசைகளை கட்டுப்படுத்த முடியும்: அம்மா நடிகை பகீர் பேட்டி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்