ஆப்நகரம்

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா; 60க்கும் மேற்பட்டோர் புறக்கணிப்பதாக அறிவிப்பு!

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க இருப்பதாக 69 பேர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 3 May 2018, 2:27 pm
டெல்லி: தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க இருப்பதாக 69 பேர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Ramnath Kovind
ராம்நாத் கோவிந்த்


தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, தேர்வு அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பார்.

இந்நிலையில் இன்றைய விழாவில், 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விருது பெறுவோர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விழாவில் பங்கேற்காமல் புறக்கணிப்போம் என்று விருது அறிவிக்கப்பட்ட 69 பேர், திரைப்பட விழா இயக்குநரகம், குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், குடியரசுத் தலைவர் தராவிடில் எங்களுக்கு வேண்டாம். குடியரசுத் தலைவர் விருதை வழங்காதது 65 ஆண்டுகால நடைமுறையின் மரபு மீறல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மத்திய அமைச்சார் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட யாரிடம் இருந்து விருது பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் விழாவை மட்டுமே புறக்கணிக்கிறோம். தேசிய விருதை புறக்கணிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தேசிய திரைப்பட விழாவை 69 பேர் புறக்கணிக்க இருப்பதாக எடுக்கப்பட்ட முடிவு, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

National Film Awards recipients to skip ceremony as President will present only 11 awards.

அடுத்த செய்தி

டிரெண்டிங்