ஆப்நகரம்

நடிகர் விவேக்கின் மரணத்தில் மர்மம்: தேசிய மனித உரிமை ஆணையம் முக்கிய அறிவிப்பு!

நடிகர் விவேக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர் சரவணன்என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்.

Samayam Tamil 25 Aug 2021, 1:01 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான சின்ன கலைவாணர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பு காலமானார். அவரின் திடீர் மறைவு திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
Samayam Tamil Actor_Vivek
Actor_Vivek


சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் மட்டும் ரசிகர்கள் சமூக அக்கறையை போதிப்பதோடு நிறுத்தி விடாமல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு சமூக சேவகராகவே திகழ்ந்தார் விவேக். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஐயா அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள விவேக், மரங்கள் நடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் எப்போதும் போல படப்பிடிப்பில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மயங்கி விழுந்த அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

உங்களை எம்ஜிஆராக பார்க்க காத்திருக்கிறேன்: அரவிந்த் சாமியை வாழ்த்திய பிரபல இயக்குனர்!
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் தேசிய மனித உரிமை ஆணையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் அவரின் இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்