ஆப்நகரம்

ரஜினிக்கு வில்லனாகும் நவாசுதீன் சித்திக்!

ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

Samayam Tamil 11 Apr 2018, 3:38 pm
ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil rajini-navasudeen


நடிகர் ரஜினிகாந்த் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் முடிந்தபிறகு தொடங்கவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. மேலும் இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்தப் படத்தில், ரஜினியுடன் மோதும் வில்லன் தேர்வு நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மும்பைக்குச் சென்று நவாசுதீனிடம் கதை கூறியுள்ளார். அவரும் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்றே தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்