ஆப்நகரம்

என்னது.. நயன்தாராவுக்கு ஏற்கனவே பதிவு திருமணம் முடிஞ்சுருச்சா? தீயாய் பரவும் தகவல்!

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

Samayam Tamil 10 May 2022, 10:44 am
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இதனை நயன்தாராவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Nayathara


இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள மடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

நல்லா குடிப்பா.. நிறைய பாய் ஃபிரண்ட்ஸ்... விஜே சித்ரா வாழ்க்கை மர்மம் நிறைந்தது.. தோழி திடுக்!

இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மற்றொரு பக்கம் விக்னேஷ் சிவனின் சொந்த ஊரான திருச்சி லால்குடி மக்கள் நயன்தாரா தங்கள் ஊர் மருமகள் ஆகப்போகிறார் என கொண்டாடி வருகின்றனர்.
சினிமா கனவுடன் வந்த இளம் பெண்களை தொழிலதிபர்களுக்கு விருந்தாக்கிய பிரபல நடிகர்... பகீர் தகவல்!
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

அது பதிவு திருமணம் என்பதால் தற்போது குடும்பத்தார் சூழ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்