ஆப்நகரம்

நயன்தாராவின் நெற்றிக்கண்: அட, இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா?

லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தன் 65 வது படத்தில் சூப்ப ஸ்டார் ரஜினியின் வெற்றிப்பட டைட்டிலில் நடிக்க உள்ளார்.

Samayam Tamil 16 Sep 2019, 11:57 am
பத்து வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கொடி நாட்டி வரும் நயன்தாரா, தற்போது தனக்கான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனது 65 வது படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து 1981ல் வெளியாகி வெற்றிபெற்ற 'நெற்றிக்கண்' திரைப்படத் தலைப்பில் நடிக்க உள்ளார்.
Samayam Tamil 70559178_393950421303065_9099732937858875392_n


நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இப்படத்தை தனது Rowdy Pictures சார்பில் முதல் முறையாக தயாரிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்த 'அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான முறையில் நடந்தது.

Rowdy Picturesன் முதல் படைப்பாக உருவாகும் 'நெற்றிக்கண்' படத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவெனில் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் முதல் படைப்பும் 'நெற்றிக்கண்' ஆகும்.

இது பற்றி விக்னேஷ் சிவன் கூறியதாவது,

எங்கள் மொத்தப் படக்குழுவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும், மறைந்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களுக்கும், கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி அவர்களுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். மேலும் நயன்தாராவை 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதும் கவிதாலயா நிறுவனம் என்பதையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறுகிறோம். இயக்குநர் மிலிந்த் ராவின் 'நெற்றிக்கண்' திரைக்கதை அவரது முந்தைய படமான 'அவள்' படத்தினைப் போலவே ஒரு அற்புதமான த்ரில்லராக அமைந்திருக்கிறது. 'அவள்' படத்தினை போலவே இப்படமும் அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்றார்.


மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது. நயன்தாரா தவிர்த்த மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படதில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

இசை - கிரிஷ்
ஒளிப்பதிவு - என். கார்த்திக் கணேஷ்
கலை இயக்கம் - எஸ். கமலநாதன்
ஸ்டண்ட் - சி. மகேஷ்
எடிட்டிங் - லாரன்ஸ் கிஷோர்
ஒலியமைப்பு - விஜய் ரத்தினம்
உடை வடிவமைப்பு - சைதன்யா ராவ், தினேஷ் மனோகரன்
வசனம் - நவீன் சுந்தரமூர்த்தி
விளம்பர வடிவமைப்பு - கபிலன்
மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா,
ரேகா D one
இணை தயாரிப்பு - கே. எஸ். மயில்வாகணன்
தயாரிப்பு மேற்பார்வை - வி.கே. குபேந்திரன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு - ஜி. முருகபூபதி, எம். மணிகண்டன்

ஷூட்டிங் மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்