ஆப்நகரம்

Nayanthara: நயன்தாரா உங்க பொண்டாட்டி, இனிமே அப்படி செய்யாதீங்க விக்னேஷ் சிவன்

நயன்தாரா வெறும் நடிகை மட்டும் அல்ல உங்களின் மனைவி என்பதை மறக்க வேண்டாம் என ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 18 Aug 2022, 12:35 pm
நயன்தாரா உங்களின் மனைவி என்பதை மறந்துவிட வேண்டாம் என விக்னேஷ் சிவனிடம் சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil nayanthara in spainnetizens request to vignesh shivan
Nayanthara: நயன்தாரா உங்க பொண்டாட்டி, இனிமே அப்படி செய்யாதீங்க விக்னேஷ் சிவன்


நயன்தாரா

நயன்தாராவும், அவரின் காதல் கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஸ்பெயினுக்கு சென்றிருக்கிறார்கள். விமானத்தில் ஏறியதில் இருந்தே தன் மனைவியுடன் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன்

நயன்தாராவை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று வகை, வகையாக புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தன் சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள இப்படி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுகிறார். ஆனால் அவரை சமூக வலைதளவாசிகள் விமர்சிக்கிறார்கள்.

மனைவி

விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, நீங்க உங்க பொண்டாட்டி கையை பிடிப்பது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது தப்பே இல்லை. ஆனால் அதை எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிடாதீர்கள். அந்த கருப்பு நிற உடையில் நயன்தாராவை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளீர்களே. அவர் அழகாகத் தான் இருக்கிறார். ஆனால் அவர் உங்களின் மனைவி. இப்படி எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிடக் கூடாது. அவரை வெறும் நடிகையாக மட்டும் பார்க்காதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்

சமூக வலைதளவாசிகள் விமர்சித்தாலும், நயன்தாரா ரசிகர்கள் செம குஷியாக இருக்கிறார்கள். இது விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா கணக்கு இல்லை தலைவியின் கணக்கு. தலைவியின் புகைப்படங்களாக இருக்கிறது. நன்றி அன்பான இயக்குநரே. இதை பார்க்கத் தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தோம் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்