சிம்புவுடன்...
நடிகை நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகை நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில் இருவரும் பிரிந்தனர்.
பிரபு தேவா..
அதன்பிறகு இயக்குநரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபு தேவாவை காதலித்தார் நயன். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தான் நானும் ரவுடிதான் படத்தின் கதையை சொல்லப்போன இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் தீ பற்றியது.
கூகுளில் தேடல்
இந்நிலையில் ஒரு வழியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ளார் நயன்தாரா. தனது கழுத்தில் ஏறிய தாலியை கையில் எடுத்து பார்த்து பூரித்துப் போனார் நயன்தாரா. இந்நிலையில்நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உள்ள வயது வித்தியாசத்தை கூகுலில் தேடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மாங்கல்ய தோஷம்
7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் லிவிங் டுகெதரில் ஒன்றாக வசித்து வந்தனர். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த அவர்கள், கோவில் கோவிலாகவும் வழிபட்டு வந்தனர். நயன்தாராவின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பல பூஜைகளையும் செய்து வந்தார் நயன்தாரா.
நயன்தாரா மூத்தவர்
நயன்தாரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர். விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 36 ஆகிறது. நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 37 ஆகிறது. இதைத்தான் கூகுளில் அதிகம் தேடியிருக்கிறார்களாம் ரசிகர்கள்.