ஆப்நகரம்

படம் துவஙகும் முன்பே அதிக விலைபோன ‘லவ் ஆக்ஷன் டிராமா’!

நிவின்பாலி & நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ள ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படம் துவங்கும் முன்பே சேட்டிலைட் உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

Samayam Tamil 17 Apr 2018, 4:34 pm
நிவின்பாலி & நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ள ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படம் துவங்கும் முன்பே சேட்டிலைட் உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
Samayam Tamil love-action-drama


மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் வினீத் சீனிவாசன். இவரது தம்பி தயன் சீனிவாசன். நடிகராக வலம் வந்த இவர் தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் நிவின்பாலி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினியாகவும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்துக்கு ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை அஜு வர்கீஸ் தயாரிக்கிறார். மேலும் இவர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் இம்மாதம் தொடங்குவதாக இருந்தது. நடிகர் நிவின்பாலிக்கு காலில் அடிபட்டதால் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.

இந்தநிலையில் இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு இப்போதே பிரபல ஆசியாநெட் சேனல் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தபடம் ரிலீஸாகி, 30 தியேட்டர்களில் 25 நாட்கள் ஓடினால், இப்போது பேசப்பட்டுள்ள தொகையை விட இன்னும் கூடுதலான தொகை கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்