ஆப்நகரம்

’என்னா நடிப்புடா!’ - யோகிபாபுவை புதிய படத்திற்கு பரிந்துரை செய்த நயன்தாரா!

தனது புதிய படம் ஒன்றில், யோகி பாபுவிற்கு முக்கிய கதாபாத்திரம் வழங்க நயன்தாரா பரிந்துரை செய்துள்ளார்.

Samayam Tamil 16 Jun 2018, 2:22 pm
சென்னை: தனது புதிய படம் ஒன்றில், யோகி பாபுவிற்கு முக்கிய கதாபாத்திரம் வழங்க நயன்தாரா பரிந்துரை செய்துள்ளார்.
Samayam Tamil Nayanthara with Yogi Babu
நயன்தாரா & யோகிபாபு


சிவா இயக்கத்தில் அஜித் 4வது முறையாக நடிக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அப்படத்தை ‘லட்சுமி’, ‘மா’ புகழ் கே.எம்.சர்ஜுன் இயக்குகிறார். முன்னதாக ‘கோலமாவு கோகிலா’ படத்தில் காமெடியில் கலக்கியவர் யோகி பாபு.

அதில் நயன்தாராவிடம் காதலை சொல்லும் பாடல் ’கல்யாண வயசு’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் யோகி பாபுவின் நடிப்பு நயன்தாராவிற்கு மிகவும் பிடித்துப் போனது.

இதனால் கே.எம்.சர்ஜுன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபுவிற்கு முக்கிய கதாபாத்திரம் அளிக்க நயன்தாரா பரிந்துரை செய்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Nayanthara recommends Yogi Babu in her new movie.

அடுத்த செய்தி

டிரெண்டிங்