ஆப்நகரம்

Nayanthara: நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி ரகசியமாக செல்லும் இடம் எது தெரியுமா?

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் ரோட்டுக் கடைகளில் போய் பிரியாணி சாப்பிடுவார்களாம். இந்த தகவலை சொன்னது வேறு யாருமில்லை, நயன்தாராவே தான்.

Samayam Tamil 15 Aug 2021, 4:26 pm

ஹைலைட்ஸ்:

  • டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா
  • காதலருடன் ரோட்டுக் கடைகளில் சாப்பிடும் நயன்தாரா

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil nayanthara
நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோதில் இருந்து நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார். நயன்தாரா இப்படி டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அபூர்வம். அதனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரின் காதல் வாழ்க்கை பற்றி நிறைய கேள்விகளை கேட்டார் டிடி.

அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கூறியதாவது,

நானும், விக்னேஷ் சிவனும் சாப்பாடு பிரியர்கள். அதிலும் குறிப்பாக எங்களுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். யாருக்கும் தெரியாமல் அடிக்கடி ரோட்டுக் கடைகளில் சாப்பிடுவோம் என்றார்.

என்னது, நயன்தாராவுக்கு பிரியாணி பிடிக்குமா, தலைவி ரோட்டுக் கடைகளில் அடிக்கடி சாப்பிடுகிறாரா என்று ரசிகர்கள் வியந்துள்ளனர்.

இதற்கிடையே மிலிந்த் ராவ் இயக்கத்தில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா கண் பார்வையில்லாதவராக நடித்த நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஓடிடியில் வெளியானது. படத்தை பார்க்கும் அனைவரும் நயன்தாராவின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நயன்தாரா பட்ட கஷ்டமெல்லாம் இப்படி நாசமாப் போச்சே!இந்நிலையில் படம் வெளியான கையோடு அதை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்