ஆப்நகரம்

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா: படக்குழு அதிர்ச்சி!

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்க சம்பளமாக ரூ.6 கோடி கேட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 20 Nov 2018, 5:52 pm
நடிகர் விஜய், மூன்றாவது முறையாக அட்லியுடன் இணையவுள்ளார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு முன்பு அட்லி இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.
Samayam Tamil Nayanthara


மீண்டும் நயன்தாராவுடன் பணியாற்ற வேண்டும் என்று இயக்குனர் அட்லி விரும்பினார். அதற்காக ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களில்கூட நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்தார் இயக்குனர் அட்லி.

அது முடியாமல் போக, கண்டிப்பாக இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால், அந்த படத்திற்கு நயன்தாரா தரப்பு ரூ. 6 கோடியை சம்பளமாக கேட்க, படக்குழுவே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்