ஆப்நகரம்

கமலுடன் நடிக்க சில நிபந்தனைகளை விதித்த நயன்தாரா!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

Samayam Tamil 4 Jul 2018, 5:46 pm
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
Samayam Tamil kamal nayan.


நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் கமல் பிக்பாஸ் மற்றும் ‘விஸ்வரூபம் 2’ போன்ற பணிகளில் பிஸியாக இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் படமாக்கப்படவில்லை. தற்போது அவர் இல்லாத காட்சிகளை இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க பல நிபந்தனைகளை தயாரிப்பு தரப்புக்க விதித்துள்ளாராம். தன்னுடைய நிபந்தனைகளை ஒப்பந்தமாக எழுதி அதில் தயாரிப்பாளர்கள் தரப்பில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்றும் உள்ளாராம்.

அதில் ‘‘நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன். முத்தக் காட்சிகளில் நடிப்பது என்றால் அதை முன்கூட்டியே என்னிடம் தெரிவிக்க வேண்டும்‘‘ என்றும் தெரிவித்துள்ளாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்