ஆப்நகரம்

Nayanthara இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்களே ஆர்.ஜே. பாலாஜி: நயன் ரசிகர்கள் அதிருப்தி

மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி தளத்தில் தான் வெளியாகப் போகிறது என்கிற தகவல் அறிந்த நயன்தாரா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 5 Oct 2020, 12:18 pm
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக அம்மனாக நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்தார் பாலாஜி. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதால் ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
Samayam Tamil mookuthi amman


இதற்கிடையே பிற நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாவதை பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி அம்மன் படமும் அப்படி தான் வெளியாகுமா என்று ஆர்.ஜே. பாலாஜியிடம் கேட்டார்கள். அதற்கு அவரோ, மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் அல்ல மாறாக தியேட்டர்களில் தான் வெளியாகும். அம்மன் படத்தை தியேட்டர்களில் பார்த்தால் தான் திருப்தியாக இருக்கும் என்றார்.

ஆர்.ஜே. பாலாஜி அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் மூக்குத்தி அம்மனை தியேட்டர்களில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் ஓடிடியில் ரிலீஸாகப் போகிறதாம், விலை பேசி முடித்துவிட்டார்களாம் என்று பேச்சு கிளம்பியது.

ஓமைகாட் நயன்தாராவுமா?: யார் எல்லாம் எதிர்க்கப் போறாங்களோ

ஆர்.ஜே. பாலாஜியே சொல்லிட்டார், அதனால் அந்த தகவலில் உண்மை இருக்காது என்றார்கள் ரசிகர்கள். ஆனால் மூக்குத்தி அம்மன் படம் ஹாட்ஸ்டாரில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகப் போவது உறுதியாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இப்படி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாரே என்று தெரிவித்துள்ளனர். ஒரு சிலரோ, அவர் என்ன தான் செய்வார். நிலைமை அப்படி, அதனால் ஓடிடியில் படத்தை வெளியிடுகிறார் என்று கூறியுள்ளனர்.

தீபாவளிக்கு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து ரசித்த காலம் போய் தற்போது வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் பார்க்க வேண்டியிருக்கிறது. எல்லாம் இந்த கொரோனா செய்த காரியம் என்று சினிமா ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐ.பி.எல். போட்டிகளுக்காக மும்பையில் இருந்து வர்ணனை செய்து வந்தார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில் 20 நாட்கள் தான் வர்ணனை செய்யப் போவது இல்லை என்றார். மூக்குத்தி அம்மன் படத்தை விளம்பரம் செய்ய சென்னைக்கு செல்வதாக கூறினார்.

மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடி தளத்திற்கு கொடுத்துவிட்ட நிலையில் விளம்பரம் செய்யப் போகிறார் ஆர்.ஜே. பாலாஜி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்