ஆப்நகரம்

அது வதந்தி இல்லை உண்மையே: தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன் படம் தீபாவளி ப்பெஷலாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Oct 2020, 4:25 pm
லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார். நயன்தாரா முதல்முறையாக அம்மனாக நடித்துள்ளார். அம்மனாக நடிக்க நயன்தாரா விரதம் எல்லாம் இருந்தாராம்.
Samayam Tamil mookuthi amman


கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் எல்லாம் மாதக் கணக்கில் மூடப்பட்டுள்ளதால் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மூக்குத்தி அம்மனும் ஓடிடியில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது.
அந்த தகவலை தற்போது ஆர்.ஜே. பாலாஜி உறுதி செய்துள்ளார். மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி கூறியது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

அம்மன் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும். மூக்குத்தி அம்மன் நிச்சயம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று கூறிவிட்டு தற்போது இப்படி மாற்றிப் பேசுகிறீர்களை பாலாஜி என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Nayanthara இப்படி நம்ப வச்சு ஏமாத்திட்டீங்களே ஆர்.ஜே. பாலாஜி: நயன் ரசிகர்கள் அதிருப்தி

இருப்பினும் நிலைமை அப்படி இருப்பதால் பாலாஜியும் தான் என்ன செய்வார் என்று சிலர் கூறியுள்ளனர். இதற்கிடையே மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வந்த நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கிறார். போஸ்டரை பார்த்தவர்கள், நயன்தாராவை பார்த்தால் வித்தியாசமாக இருக்கிறார், பார்வையற்றவர் போன்று தெரிகிறார். இந்த படம் நிச்சயம் மாஸாக இருக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளனர். நெற்றிக்கண் படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்த விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார். நெற்றிக்கண் படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள காட்சிகளை விரைவில் படமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை இந்த மாதம் துவங்க திட்டமிட்டார்கள். ஆனால் ரஜினி தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று கூறியதால் படப்பிடிப்பை மீண்டும் துவங்கும் திட்டத்தை தள்ளிப் போட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்