ஆப்நகரம்

இதற்குத் தான் நயன்தாரா தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா?

தலைவர் 168 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 4 Feb 2020, 4:22 pm
தலைவர் 168 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil nayanthara to act as a lawyer in thalaivar 168
இதற்குத் தான் நயன்தாரா தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா?


தலைவர் 168

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தை சிவா இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரஜினிக்கு குஷ்பு, மீனா என்று இரண்டு மனைவிகள் என்று கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்கிறார். இந்நிலையில் ரஜினி படத்தில் நயன்தாராவுக்கு என்ன வேலை என்பது தெரிய வந்துள்ளது.

நயன்தாரா

தலைவர் 168 படத்தில் நயன்தாரா வழக்கறிஞராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா இதுவரை வழக்கறிஞராக நடித்தது இல்லை. மேலும் சிவா படம் என்பதால் தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அவரின் நம்பிக்கை வீண் போகாமல் இருக்கட்டும்.

தர்பார்

முன்னதாக கடந்த மாதம் வெளியான தர்பார் படத்தில் நயன்தாராவை டம்மி பீஸாக்கியதை பார்த்த அவரின் ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். இதையடுத்து அவர் மீண்டும் ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. நயன்தாரா ரஜினிக்காக மீண்டும் தனது கொள்கையை தளர்த்தி அட்ஜஸ்ட் செய்கிறாரோ என்று ரசிகர்கள் நினைத்தார்கள். இந்நிலையில் தான் நயனுக்கு வெயிட்டு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

ஆதங்கம்

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தது தான் நான் என் கெரியரில் செய்த மிகப் பெரிய தவறு என்றார் நயன்தாரா. அதுவும் தர்பார் படத்தில் நடித்து முடித்த கையோடு பேட்டியில் கூறினார். அவர் கூறியது அப்பொழுது புரியவில்லை ஆனால் தர்பார் ரிலீஸான பிறகு தான் புரிந்தது. தர்பாரில் தனது கதாபாத்திரத்தால் அதிருப்தி ஏற்படவே அப்படி பேட்டி அளித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்