ஆப்நகரம்

நயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப்பது தெரியுமா?

நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, ஜோதிகா ஆகியோருக்கு ஒரே வீக்னஸ் இருப்பது உங்களுக்கு தெரியுமா

Samayam Tamil 26 May 2020, 6:33 pm
நடிக்க வந்தவுடன் நடிகைகள் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் கடும் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். பிடித்த உணவு வகைகளை சாப்பிட முடியாமல் ஏக்கத்துடன் பார்க்க மட்டும் செய்யும் பரிதாப நிலையில் நடிகைகள் உள்ளனர். உணவுக் கட்டுப்பாடு தவிர்த்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, யோகா, தியானம் என்று உடம்பு தவிர்த்து மனதையும் லேசாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
Samayam Tamil nayanthara


என்ன தான் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு உணவை பார்த்தால் டயட்டாவது, கியட்டாவது என்று கட்டுப்பாட்டை தளர்த்தி அந்த உணவை ஃபுல் கட்டு கட்டும் நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி எந்த உணவை பார்த்தால் எந்தெந்த நடிகைகளால் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நயன்தாரா
நடிக்க வந்த புதிதில் பூசினாற் போன்று இருந்ததுடன், குட்டி தொப்பையும் வைத்திருந்தார் நயன்தாரா. அதன் பிறகு தான் இனி ஃபிட்டாக இருப்பேன் என்று ஒரு முடிவுக்கு வந்து அதை இன்று வரை கடைபிடித்து வருகிறார். நயன்தாரா எப்படி இப்படி ஸ்லிம்மாக இருக்கிறார் என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக உள்ளனர். ஆனால் அந்த ரகசியம் இதுவரை ரகசியமாகவே உள்ளது. ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாராவுக்கு இருக்கும் ஒரு வீக் ஃபாயிண்ட் ஹைதராபாதி பிரியாணி தான். பிரியாணிக்காக மட்டும் தான் நயன்தாரா டயட்டை கைவிடுகிறார். ஃபுல் கட்டு கட்டிவிட்டு அதன் பிறகு செமயாக ஒர்க்அவுட் செய்துவிடுகிறார்.

த்ரிஷா
த்ரிஷா நடிக்க வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே தான் இருக்கிறார். இந்த 21 ஆண்டுகளில் த்ரிஷா வெயிட் போட்டதே இல்லை. எப்படி த்ரிஷா உங்களால் மட்டும் உடம்பை இந்த அளவுக்கு மெயின்டெய்ன் செய்ய முடிகிறது என்று கேட்காதவர்களே இல்லை. த்ரிஷாவுக்கு ஹைதராபாதி பிரியாணி தான் வீக்னஸ். ஹைதராபாதி பிரியாணியை பார்த்துவிட்டால் த்ரிஷாவால் அதை சாப்பிடாமல் இருக்க முடியாது.

ஜோதிகா
ஜோதிகாவுக்கு ஹைதராபாதி பிரியாணி என்றால் உயிர். அதை தன் வீட்டிலேயே சமைத்து அசத்தவும் செய்வாராம். அந்த பிரியாணியை பார்த்தால் மட்டும் ஜோதிகாவால் டயட்டில் எல்லாம் இருக்க முடியாதாம். திருப்தியாக பிரியாணியை சாப்பிடுவாராம். ஜோதிகாவுக்கு பிரியாணி பிடிக்குமா என்று நீங்கள் வியப்பது புரிகிறது.

தமன்னா
மில்க் பியூட்டி தமன்னா எப்பொழுதுமே ஸ்லிம்மாக தான் இருக்கிறார். அதற்கு காரணம் கடும் உணவுக் கட்டுப்பாடு, ஒர்க்அவுட். ஆனால் தமன்னாவுக்கும் ஹைதராபாதி பிரியாணி என்றால் உயிர். அதனால் பிரியாணியா, டயட்டா என்று கேட்டால் தமன்னா பிரியாணியை தான் தேர்வு செய்வார்.

காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் பிடித்த உணவு ஹைதராபாதி பிரியாணி தான். பிரியாணியை பார்த்துவிட்டால் காஜலுக்கு டயட் எல்லாம் மறந்துவிடுமாம். ஆளாளுக்கு ஹைதராபாதி பிரியாணியை விரும்பி சாப்பிடுவது குறித்து படித்த உடன் உங்களுக்கும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டதா?. தப்பில்ல, தப்பில்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்