ஆப்நகரம்

அம்மாடியோவ்!! அறம் முதல் நாள் வசூல் இவ்வளவா?

அறம் படத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பு பெரியளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு வரும்போது, இப்படத்தின் வசூலும் சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

TOI Contributor 11 Nov 2017, 3:17 pm
அறம் படத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பு பெரியளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு வரும்போது, இப்படத்தின் வசூலும் சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil nayantharas aramm box office collection
அம்மாடியோவ்!! அறம் முதல் நாள் வசூல் இவ்வளவா?


இந்தப் படத்தில் கலெக்டர் வேடத்தில் வரும் நயன்தாரா கிராம மக்களுக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதுதான் கதை. இந்தப் படத்தில் அவரது உன்னத நடிப்பின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா தாவியுள்ளார் என்றே கூறலாம். உணர்வை வெளிப்படுத்தும் விதம், கட்டுப்படுத்தும் விதம் என்று அசத்தியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இந்தக் கால கட்டத்தில் ஒரு உன்னதாமான நடிகை என்ற முத்திரையை தாங்கி ஜொலிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஹீரோக்கள் இல்லாமல் ஹீரோயின் மட்டுமே அசத்தும் படமாக அறம் உள்ளது. அரசியல்வாதிகள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் நயன்தாராவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

அறம் விமர்சனம் வெளியான பின்னர் நேற்று மாலை, இரவு காட்சிகள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 1 கோடி ரூபாய் வரை அறம் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்