ஆப்நகரம்

குடியரசு தினத்தில் வெளியாகும் நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’!

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கொலையுதிர்காலம்’ வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 10 Dec 2018, 2:02 pm
வரும் ஜனவரி பொங்கல் விடுமுறையில் ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் வெளியாகின்றன. ஜனவரி 10ம் தேதி ‘விஸ்வாசம்’ திரைப்படமும், ஜனவரி ‘15’ம் தேதி ‘பேட்ட’ திரைப்படமும் வெளியாகிறது. இந்த நிலையில் இரண்டு பெரிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாவதால் ஜனவரியில் வேறு திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இல்லை.
Samayam Tamil nayan


ஆனால் நடிகை நயன்தாராவின் ‘கொலையுதிர்க்காலம்‘ திரைப்படம் வரும் ஜனவரியில் ரிலீஸ் என சற்றுமுன் புதிய போஸ்டர் ஒன்றின்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக ஜனவரி 26, குடியரசு தின விடுமுறையில் இந்த படம் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

‘உன்னை போல் ஒருவன்’ பட இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, பூமிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்