ஆப்நகரம்

IstandwithSuriya என்ன தைரியம், சூர்யா மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்

நீட் தேர்வு தொடர்பாக சூர்யா மீது நடிவடுக்கை எடுக்கக் கோரி திபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியிருப்பதை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். இதையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 14 Sep 2020, 9:10 am
நீட் தேர்வு பயத்தால் நேற்று ஒரே நாளில் ஒரு மாணவி, இரண்டு மாணவர்கள் என்று மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் மூன்று உயிர்கள் பறிபோனதை பார்த்த சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
Samayam Tamil suriya


அந்த அறிக்கையில் அவர், கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது என்று தெரிவித்திருந்தார்.

Suriya ஏழை மாணவர்களின்‌ நிதர்சனம்‌ அறியாதவர்கள்‌ கல்விக்‌ கொள்கைகளை வகுக்கிறார்கள்: சூர்யா

இதை பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் சுப்ரமணியம் கூறியிருப்பதாவது,

சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. மேலும் நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் இருக்கிறது.

அதோடு, நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிபடுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதி சுப்மணியம் கடிதம் எழுதியதை பார்த்த அவரின் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். #IStandWithSuriya என்கிற ஹேஷ்டேகுடன் பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

சூர்யா விவகாரம் பற்றி சமூக வலைதளவாசிகளும், ரசிகர்களும் கூறியிருப்பதாவது,

சூர்யா சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?. மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தது அவ்வளவு பெரிய குற்றமாகிவிட்டதா?. பொய்யை மட்டுமே பேசுபவர்கள் மத்தியில் சூர்யா உண்மையை சொல்லியிருப்பது பெரிய குற்றம் தான். அதனால் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். என்ன தைரியம் இருந்தால் உண்மையை பேசுவார்.
சூர்யா தன் அகரம் அறக்கட்டளை மாணவர்களுக்காக மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்காகவும் கவலைப்படுகிறார். சூர்யா சொன்னது தான் சரி. கொரோனாவுக்கு பயந்து நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு செல்லாதபோது மாணவர்களை மட்டும் தேர்வு எழுத மையங்களுக்கு செல்லுமாறு கூறுவது நியாயம் இல்லை.
ஹைகோர்ட்டாவது ம....வது என்று ஒருவர் கூறியபோது வராத கோபம் தற்போது சூர்யா உண்மையை சொன்னதும் வருகிறதோ?. சூர்யாவுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

சூர்யாவுக்காக விஜய் ரசிகர்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்