ஆப்நகரம்

ரசிகர்களை மிரள வைத்த வரலட்சுமியின் புதிய அவதாரம்!!

நீயா 2 படத்தில் நடிகை வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன என்பதை விளக்கும் போஸ்டர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Samayam Tamil 30 Aug 2018, 4:08 pm
நீயா 2 படத்தில் நடிகை வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன என்பதை விளக்கும் போஸ்டர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Samayam Tamil DlxDk2RXoAIYT9_


நடிகை வரலட்சுமி சரத்குமார், சிறிய படமாக இருந்தாலும், வித்தியாசமான தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார், அடுத்ததாக ‘நீயா 2’ படத்தில் நடித்து வருகிறார்.

கமல் நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நீயா படத்தின், இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் காமெடி நடிகர் பாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை எல்.கே.சுரேஷ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகை வரலட்சுமியின் கதாபாத்திரம் பற்றிய போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகியது. அதைப் பார்த்த ரசிகர்கள், அவரின் தோற்றத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்ததோடு, அவரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்