ஆப்நகரம்

“கோட் அணிவதன் காரணம் என்ன”? ரகசியம் உடைத்த நீயா நானா கோபிநாத்!

“கோட் அணிவதன் காரணம் என்ன”? ரகசியம் உடைத்த நீயா நானா கோபிநாத்!

TOI Contributor 6 Nov 2016, 12:25 pm
ன்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான கோபிநாத் நீயா நானா நிகழ்ச்சி மூலமும், அதில் அணிந்து வரும் கோட் மூலமும் மிகவும் பிரபலம். இவர் நிமிர்ந்து நில், திருநாள் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கோட் அணிவதால் ரசிகர்கள் பலரும் இணையத்தில் தொடர்ந்து இவரை கலாய்த்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இத்தனை வருட காலமாக கோட் அணிவதன் ரகசியம் என்ன என்பதை கோபிநாத் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Samayam Tamil neeya naana gopinath revealed about his coat secret
“கோட் அணிவதன் காரணம் என்ன”? ரகசியம் உடைத்த நீயா நானா கோபிநாத்!


“எனக்கு கோட் அணிவதே பிடிக்காது, அதே போல் நான் கோட் அணியும் முறையும் சரியானது அல்ல, ஆனால் பின்புறம் இருக்கும் மைக்கை மறைக்கவே கோட் அணிகிறேன்”, என்று கோபிநாத் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து கோட் அணிந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருவதால் தற்போது அதுவே ஒரு டிரெண்டாகி விட்டது என்றும் கோபி நாத் விளக்கமளித்து இருக்கிறார்.

மேலும் தன்னிடம் சொந்தமாக ஒரு கோட் கூட இல்லை என்றும் நீயா நானா கோபிநாத் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்