ஆப்நகரம்

மக்களின் கடும் எதிர்ப்பால் ரத்தான நீயா நானா நிகழ்ச்சி.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில், இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட இருந்த விவாதம் கடும் எதிர்ப்பை பெற்ற நிலையில், இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.

TNN 22 Oct 2017, 4:57 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில், இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட இருந்த விவாதம் கடும் எதிர்ப்பை பெற்ற நிலையில், இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.
Samayam Tamil neeya nana today program cancelled
மக்களின் கடும் எதிர்ப்பால் ரத்தான நீயா நானா நிகழ்ச்சி.!


விஜய் தொலைக்காட்சியில், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீயா, நானா விவாத நிகழ்ச்சி நடத்தப்படுவதுண்டு. இதில் சமூக பிரச்சனைகளையும், மக்களின் அன்றாட வாழ்வியலில் நிலவும் பிரச்சனைகளையும் குறித்து இரு தரப்பாக அமர்ந்து விவாதிப்பர்.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியின் பிரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஒரு தரப்பில் தமிழக பெண்களும், மறுதரப்பில் கேரள பெண்களும் கலந்து கொண்டு யார் அழகு என்பது குறித்து விவாதித்தனர்.

மக்களிடையே பிரிவினையே கிளப்பும் இந்த பிரோமோவுக்கு பொதுமக்களிடமிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ப்ரோமோ வீடியோக்கள் , ட்வீட்டுகள் ஆகியவை நேற்று இரவு நீக்கப்பட்டன. இன்று நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது அதிக அளவில் பிரச்சனை ஆனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Neeya nana today program cancelled.

அடுத்த செய்தி

டிரெண்டிங்