ஆப்நகரம்

அஜீத்துக்காக நெகட்டிவ் கதைவைத்திருக்கும் மோகன்ராஜா!

அஜீத்தை வைத்து இயக்குவதற்காக நெகட்டிவ் ஹீரோ கதையை தயாராக வைத்திருக்கிறேன் என்று இயக்குனர் மோகன்ராஜா கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Jan 2018, 2:35 pm
அஜீத்தை வைத்து இயக்குவதற்காக நெகட்டிவ் ஹீரோ கதையை தயாராக வைத்திருக்கிறேன் என்று இயக்குனர் மோகன்ராஜா கூறியுள்ளார்.
Samayam Tamil negative story to ajith says mohan raja
அஜீத்துக்காக நெகட்டிவ் கதைவைத்திருக்கும் மோகன்ராஜா!


அஜீத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘மங்காத்தா’. இந்தப் படத்தில் அஜீத் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். ‘பில்லா’, ‘மங்காத்தா’ ஆகிய படங்கள் நெகட்டிவ் ரோல்கள் வெற்றி பெறுவதால் அவர் நெகட்டிவ் கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வருகிறார் அஜீத்

இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, அஜீத்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன்ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் அஜீத்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருப்பதாக மோகன்ராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த நிலையில் அஜித்தின் 59வது படம் ‘மங்காத்தா 2’ என்றும், அந்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்