ஆப்நகரம்

இனிமேல் அத மட்டும் செய்யமாட்டேன்: மகளுக்காக ரூட்டை மாற்றிய அஜித்!

இனி வரும் படங்களில் பெண்களுக்கு எதிரான எந்தவொரு காட்சியிலும் தல அஜித் நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 31 Aug 2019, 4:47 pm
"அமராவதி" என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித் குமார். இதன் வெற்றியை தொடர்ந்து ஆசை, காதல் கோட்டை, வாலி, தீனா, வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், வேதாளம், விஸ்வாசம் என்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழகத்தில் ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் வசம் ஈர்த்துக் கொண்டார்.
Samayam Tamil Ajith Kumar


இவர் தற்போது தன் மகளுக்காக பெண்களுக்கு எதிரான எந்த ஒரு காட்சியிலும் நடிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார். தல அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போதெல்லாம் நல்ல கதைகளைதேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பொங்கலுக்கு ரிலீசான “விஸ்வாசம்” மற்றும் இந்த மாதம் ரிலீசான “நேர்கொண்ட பார்வை” நல்ல வசூலை பார்த்துள்ளது. தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Magiciam Raman Sharma: அடப்பாவமே! விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்த மேஜிக்மேனுக்கே இந்த நிலையா?

எனது வாழ்க்கையில் கிளாமர் ஒரு பகுதி: யாஷிகா ஆனந்த்!

மண் சார்ந்த இசை கண்டிப்பாக இருக்கும்: ஜிவி பிரகாஷ்!

ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் புதுப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்ததுடன் க்ளீன் ஷேவ் செய்து தலைமுடிக்கு டை அடித்துள்ளார் அஜித். தல பழைய தலயாக மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரொம்ப காலம் கழித்து அஜித்தை இப்படி பார்த்தபரவசத்தில் உள்ளனர் தல ரசிகர்கள். அஜித்தை இப்படி மாற வைத்த வினோத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடை பெற்றது.

போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அஜித் தனது மகளுக்காக தனது ரூட்டை மாற்றியுள்ளார். அதாவது இனி பெண்களுக்கு எதிரான காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளாரர். படத்தில் அம்மாதிரி காட்சிகள் வைக்க வேண்டாம் ந்ன இயக்குநர்களிடமும்கூறியுள்ளார்.இது சரியான முடிவே என்று பலரும் அஜித்தை இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்