ஆப்நகரம்

நான் பழமைவாதி தான்.. பெண் குழந்தைகள் வளர்ப்பு குறித்து முத்தையா சர்ச்சை கருத்து!

கார்த்தி நடிப்பில் உருவாகும் 'விருமன்' பட இயக்குனர் முத்தையா பெண் பிள்ளை வளர்ப்பு குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2022, 6:40 pm
குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் தற்போது கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'கொம்பன்' படத்தை தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர்.
Samayam Tamil Muthaiah
Muthaiah


சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.

நம்ம பார்க்காததா..? பிரேம்ஜியின் வீடியோவிற்கு வெங்கட் பிரபுவின் ரியாக்சன்!
இந்நிலையில் இயக்குனர் முத்தையா சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் பெண் பிள்ளை வளர்ப்பு பற்றியும், அதிதி குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதில், பொதுவாகவே நான் என் மகளை தனியாக போட்டோ எதுவும் எடுக்க விட மாட்டேன். அப்படியே எடுத்தால் குடும்பத்தோடு எடுப்போம், நான் எடுப்பேன் தவிர மாலில் நின்று நான் எடுப்பது, போட்டோ ஷூட் பண்ணுவது என்று இந்த மாதிரி செய்ய விடமாட்டேன்

பெண்பிள்ளையை பெண்ணாக தான் வளர்க்க வேண்டும். இதனால் என்னை பழமைவாதி என்று சொன்னாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை. நான் பழமைவாதி தான். அதிதி ஷங்கரும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரிதான் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சை குறிப்பிட்டு, இணையத்தில் முத்தையாவை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்