ஆப்நகரம்

Kamal Haasan ச்சே, சான்சே இல்லை, மோடிக்கு கூட இது தோனல, கமலுக்கு தான் தோனியிருக்கு

வெங்காய விலை குறித்து ட்வீட் செய்த கமல் ஹாசனை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர்.

Samayam Tamil 23 Oct 2020, 3:26 pm
வெங்காய விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதை பார்த்த உலக நாயகன் கமல் ஹாசன் ஒரு ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டில் அவர்,
Samayam Tamil onion


பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.

விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.

விலையிறங்குவாயா வெங்காயமே? என்று தெரிவித்தார்.

வழக்கமாக கமல் ட்வீட் போட்டால், ஆண்டவரே என்ன சொல்ல வருகிறீர்கள், ஒன்னுமே புரியல என்று சமூக வலைதளவாசிகள் கூறுவார்கள். கமல், தமிழில் ட்வீட் செய்தாலும் அர்த்தம் கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் வெங்காய ட்வீட்டின் அர்த்தத்தை யாரும் கேட்கவில்லை, மாறாக கமலை தான் விமர்சிக்கிறார்கள். வெங்காய ட்வீட்டை பார்த்தவர்கள் நேற்றில் இருந்து இடைவேளை விடாமல் கமலை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கமலின் வெங்காய ட்வீட்டை பற்றி சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

யாராவது, விலை இறங்குவியானு வெங்காயத்தையே கேட்பார்களா ஆண்டவரே. தியேட்டரில் டிக்கெட் விலை கூடத் தான் அதிகரிக்கிறது. டிக்கெட் விலையே இறங்குவாயா, இல்லை நீங்கள் குறைப்பீர்களா என்று கேட்கிறோமா?.
ஏய், வெங்காயம் உன்னிடம் தான் கமல் சார் பேசுகிறார். விலை இறங்குவியா, இல்லையானு சீக்கிரமாக சொல்லு. வெங்காய விலை ரூ. 130 ஆக இருக்கும்போது குடும்பம் நடத்த முடியவில்லை என்று சொல்லும் கமல், 10 ரூபாய்க்கு விற்றபோது விவசாயிகள் எப்படி குடும்பம் நடத்துவார்கள் என்று கேட்பது இல்லையே.

விலை இறங்குவாயா வெங்காயமே என்று கேட்பது போன்று வாக்குப்பதிவு எந்திரத்தை பார்த்து மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு போடுவாயா என்று கேட்பாரோ?. வெங்காய விலையேற்றத்திற்கு காரணம் வெங்காயம் தான். அதனால் தான் கமல், வெங்காயத்திடமே நேரடியாக கேட்கிறார். கமல் ஹாசனின் அறிவை பார்த்து வியப்பாக இருக்கிறது.
வெங்காய விலையேற்றத்திற்கு யார் காரணமோ அவரின் பெயரை சொல்லி கண்டிக்கவும் ஆண்டவரே. தேர்தலில் வெங்காயமா ஓட்டு போடப் போகிறது. மக்கள் தானே போடணும். இப்படி வெங்காயத்திடம் பேசிக்கிட்டு இருந்தால் நோட்டாவை கூட தாண்ட முடியாது.

அன்னைல இருந்து சின்ராசு வெங்காயம், தக்காளி கூடலாம் பேச ஆரம்பிச்சிட்டான். வெங்காயத்திடமே பேசி விலையை குறைய வைக்கச் சொல்லும் ஐடியா மோடிக்கு வரவில்லையே என்று தெரிவித்துள்ளனர்.

Shankar ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறீங்களா, நான் கெளம்பட்டுமா?: லைகாவுக்கு ஷங்கர் கடிதம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்