ஆப்நகரம்

Rajinikanth பாவம்யா ரஜினி, இதெல்லாம் டூ, டூ மச்

தர்பார் ரிலீஸையொட்டி சமூக வலைதளங்களில் ரஜினியை பற்றி தான் பேச்சாக உள்ளது.

Samayam Tamil 8 Jan 2020, 1:33 pm
தர்பார் ரிலீஸையொட்டி சமூக வலைதளங்களில் ரஜினியை பற்றி தான் பேச்சாக உள்ளது.
Samayam Tamil netizens make fun of rajinikanth ahead of darbar release
Rajinikanth பாவம்யா ரஜினி, இதெல்லாம் டூ, டூ மச்


ரஜினி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி ஆதித்யா அருணாச்சலமாக நடித்துள்ள தர்பார் படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே ரஜினியை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களோ தர்பார் வேற லெவலாக இருக்கப் போகிறது. விடியும் வரை காத்திருக்க வேண்டுமே என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றவர்களோ வேறு மாதிரி பேசுகிறார்கள்.

கருத்து

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் இன்று பாரத் பந்த் நடக்கிறது. இது குறித்து ரஜினி கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டார். கருத்து தெரிவித்து அவருக்கு எதிராக திரும்பிவிட்டால் அது தர்பார் வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் படம் ரிலீஸாகும் வரை அவர் மீடியாவையும் சந்திக்க மாட்டார், ட்வீட்டும் செய்ய மாட்டார் என்று கூறி நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Twitter-பேட்டி எல்லாம் வேண்டாம் தெய்வமே..!! பூட்டிகிட்டு ...

கிண்டல்

ரஜினியை யார் எவ்வளவு கிண்டல் செய்தாலும் அவர் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஒரு மனிதரை எத்தனை ஆண்டுகளாகத் தான் இப்படி கிண்டல் செய்து மீம்ஸ் போடுவீர்கள் என்று அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. உங்க ஆளு தான் பெரிய சூப்பர் ஸ்டார் ஆச்சே. அவர் பெயரை வைத்தே படத்தை ஓட்ட வேண்டியது தானே, ஏன் எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு கோடி, கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள் என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தர்பார்

அரசியல் கட்சி துவங்கி தமிழக முதல்வராக ஆசைப்படுவதால் தான் பொது விஷயங்கள் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு என்பதற்காக ஒரு மனிதரை இந்த பாடா படுத்துவது என்கிறார்கள் ரசிகர்கள். இப்படி ரஜினி பற்றியும், தர்பார் பற்றியும் சமூக வலைதளத்தில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி கருத்து தெரிவித்தாலும் பிரச்சனை, தெரிவிக்காவிட்டாலும் பிரச்சனையா இருக்கே.

அடுத்த செய்தி

டிரெண்டிங்