ஆப்நகரம்

நேரில் சந்திக்க ஒன்றரை லட்சம்: ஆப் மூலம் கல்லா கட்டும் ஆண்ட்டி நடிகை.!

நடிகை கிரண் ரத்தோட் தன்னுடன் பேசி பழகுவதற்கு, நேரில் சந்திப்பதற்கு என தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்து ஆப் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

Samayam Tamil 14 Jun 2022, 7:34 pm
விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கிரண்.அதனை தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, பிரசாந்த்துடன் ‘வின்னர்’ என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil Kiran Rathod
Kiran Rathod


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதனை தொடர்ந்து சகுனி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும், தினமும் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நடிகை கிரண், தன்னுடன் உரையாடுவதற்கும் பழகுவதற்கும், டின்னர் சாப்பிடுவதற்கும், தன்னுடைய புகைப்படங்களை பெறுவதற்கும், பல்வேறு விதங்களில் கட்டணங்களை நியமித்துள்ளார். இதுகுறித்த பட்டியலையும் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் கிரண். அதில் தன்னை நேரடியாக சந்தித்து பேசி பழகுவதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார்.

Vijay: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.?: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்.!

மேலும் அவருடன் சிலமணி நேரங்கள் பொழுது கழித்து, பேசி, அவருடன் டின்னர் சாப்பிட ரூ.1.50 லட்சம் கட்டணம். அதேபோல் இதுவரை இன்ஸ்டாகிராமில் வெளியாகாத ஹாட் புகைப்படங்கள் வேண்டுமென்றால் அதற்கு 2000 ரூபாய் கட்டணம், இன்ஸ்டாகிராமில் இல்லாத சில கண்டெண்ட்கள் வேண்டுமென்றால் அதற்கு வெறும் 49 ரூபாய் கட்டணம். வீடியோ காலில் பேச தனி கட்டணம் என அறிவித்துள்ளார்.


41 வயதான கிரண் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் இணையதளம் மற்றும் செயலி மூலம் இவ்வாறு சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. கிரணின் இந்த ஆப் மூலமாக சம்பாதிக்கு செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்