ஆப்நகரம்

சேலையில் வந்த வரலட்சுமியை கலாய்த்த நெட்டிசன்கள்

நடிகை வரலட்சுமி சேலை அணிந்து கவர்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படம் தொடர்பாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

TNN 31 Mar 2017, 2:26 pm
நடிகை வரலட்சுமி சேலை அணிந்து கவர்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படம் தொடர்பாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Samayam Tamil netizens slams varalaxmi saree glamour in iifa utsavam at hyderabad
சேலையில் வந்த வரலட்சுமியை கலாய்த்த நெட்டிசன்கள்


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது (ஐஐஎப்ஏ) வழங்கும் விழாவில் நடிகை வரலட்சுமி சேலை அணிந்து வந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விருது விழாவில் நடிகை குஷ்பு, ராதிகா சரத்குமார், அம்பிகா, நிரோஷா, சினேகா, வரலட்சுமி, ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை மீனா, நைனிகா, மாதவன் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.



இந்த விருது விழாவில் நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சேலை அணிந்து வந்த போதிலும் அது பலரை முகம் சுளிக்க வைத்தது. தனது பேக்லெஸ் ஜாக்கெட்டை முதுகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இது கவர்ச்சியாக இருந்தபோதிலும், சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தமிழ் பெண்ணான வரலட்சுமி சேலையில் சரியாக வராததை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதில், சிலர் அவர் செம ஹாட்டாக இருப்பதாகவும், சிலர் அவரை முதலில் சேலை கட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Netizens slams varalaxmi saree glamour in IIFA Utsavam at hyderabad

அடுத்த செய்தி

டிரெண்டிங்