ஆப்நகரம்

எந்த ஊர்ல அம்மன் மீசை வச்சு, டை அடிச்சிருக்கு?: நயனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

மூக்குத்தி அம்மன் படத்தின் போஸ்டர்கள் வெளியானதும் ஆனது நெட்டிசன்கள் நயன்தாராவையும், ஆர்.ஜே. பாலாஜியையும் கண்டமேனிக்கு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 2 Mar 2020, 11:23 am
மூக்குத்தி அம்மன் படத்தின் போஸ்டர்கள் வெளியானதும் ஆனது நெட்டிசன்கள் நயன்தாராவையும், ஆர்.ஜே. பாலாஜியையும் கண்டமேனிக்கு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil never seen amman with moustache and coloured hair people troll mookuthi amman nayanthara
எந்த ஊர்ல அம்மன் மீசை வச்சு, டை அடிச்சிருக்கு?: நயனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்


மூக்குத்தி அம்மன்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதை பார்த்தவர்கள் என்னய்யமா அம்மன் மீசை எல்லாம் வைத்திருக்கு என்று கலாய்த்தார்கள். இதையடுத்து வெளியான செகண்ட் லுக் போஸ்டரிலும் நயன்தாராவுக்கு மீசை இருப்பதாக கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹேர் கலர்

அம்மன் வேடத்தில் இருக்கும் நயன்தாரா அணிந்திருக்கும் மூக்குத்தியின் நிழல் தான் மீசை போன்று தெரிகிறது. அதை பார்த்து விட்டுத் தான் இது மூக்குத்தி அம்மன் இல்லை இது மீசை வச்ச அம்மன் என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் எந்த ஊரில் அம்மன் தலைமுடிக்கு தங்க நிற டை அடித்திருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். என்ன தான் மாடர்ன் அம்மனாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாய்யா பாலாஜி என்று கேட்டுள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன்

எங்களுக்கு அம்மன் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான். நயன்தாராவை பார்த்தால் அம்மன் ஃபீலிங் வரவில்லை. பல நாள் பட்டினி கிடந்தவருக்கு வேஷம் போட்டது போன்று உள்ளது. மூக்குத்தி அம்மன் என்கிற பெயரை கேட்டதும் மீனா தான் நினைவுக்கு வருகிறார். ரம்யா கிருஷ்ணன் அல்லது மீனாவையே அம்மனாக போட்டிருக்கலாம். நயன்தாரா அதுக்கு எல்லாம் சரிபட்டு வர மாட்டார் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

எல்லாம் நயன்தாரா கொடுத்த தைரியம் தான்: ஆர்.ஜே. பாலாஜி

நயன்தாரா

நயன்தாராவை பாராட்டுபவர்கள் பாராட்டவும் செய்துள்ளார்கள். தலைவி அம்மனாக கெத்தாக இருக்கிறார், படம் வேற லெவலில் இருக்கும் போன்று என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் பாவம் நயன்தாராவை கலாய்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அப்படி கலாய்த்து ட்வீட் போட்டவர்களில் சிலருக்கு ஆர்.ஜே. பாலாஜியே பதில் அளித்துள்ளார். மூக்குத்தி அம்மன் படம் வரும் மே மாதம் ரிலீஸாக உள்ளது. படம் ரிலீஸானால் எல்லாம் தெரிந்துவிடப் போகிறது. அதற்குள் ஏன் இப்படி மோதிக் கொள்ளணும்.

கிரிக்கெட் வீரரும் இல்ல, பிரபாஸும் இல்ல: அனுஷ்கா 'இவரை' தான் மணக்கிறாராம்


அடுத்த செய்தி

டிரெண்டிங்