ஆப்நகரம்

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரின் 'ஏலே' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வந்த 'ஏலே' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Samayam Tamil 26 Jan 2021, 12:27 pm
'பூவரசம் பீப்பி' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹலிதா ஷமீம். சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கி கவனிக்கத்தக்க இயக்குநரானார். பிங்க் பேக், காக்கா கடி, டர்ட்டுல்ஸ், ஹே அம்மு என நான்கு தலைப்புகளில் இடம் பெற்றுள்ள சிறிய திரைப்படங்கள் சேர்ந்ததுதான் சில்லுக்கருப்பட்டி. காதல் என்ற ஒற்றை வார்த்தை ஒவ்வொரு மனிதர்களுக்குள் எவ்வாறு வேறுபடுகிறது, என்பதை அழகாக படமாக்கியிருந்தார் ஹலிதா ஷமீம்.
Samayam Tamil halitha shameem


'ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர், காயத்ரி. இவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து சினிமாவை கற்றுக் கொண்டவர்தான் ஹலிதா சமீம்.

புஷ்கர், காயத்ரி. 'விக்ரம் வேதா' படத்தையடுத்து, புதிதாக ‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ஏலே' படம் குறித்த அறிவிப்பை கடத்த ஆண்டு மே 2ஆம் தேதி வெளியிட்டனர். அன்றைய தினமே இந்தப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. ஜூன் 30ஆம் தேதியே படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள்.

பாரதி கண்ணம்மாவில் இன்று: அஞ்சலி ரூம்ல என்ன தேடுற வெண்பா?

இப்படத்தில் சுமார் 70 பேரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்பா மகனுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவைக் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறதாம். இப்படத்தில் ‘காதலும் கடந்துபோகும்’ மற்றும் ‘காலா’ ஆகியப் படங்களில் நடித்த மணிகண்டன் கதாநாயகனாகவும் சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

முழுக்க காமெடிப் பின்னணியில் 'ஏலே' கதையை உருவாக்கியுள்ளார் ஹலீதா ஷமீம். இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஹலிதா ஷமீம் இப்படத்தை பற்றி கூறுகையில், தந்தை மகன் உறவை பற்றிய கதை என்பதை மட்டும் சொல்லலாம். தந்தை மகன் உறவு பற்றி நிறைய கதைகள் வந்திருந்தாலும் இது புதிதாக இருக்கும். நிறைய காதல் கதைகள் வந்திருந்தாலும் சில்லுக்கருப்பட்டியில் வந்த 4 கதைகள் வித்தியாசமாக இருந்த மாதிரி, இந்த கதையும் இருக்கும். இது ஒரு யுனிவர்சல் சப்ஜெக்ட். நிறைய பட விழாக்களுக்கு அனுப்பும் திட்டமும் இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

முன்னதாக, ஓட்டு வீடு, சைக்கிள், ஐஸ், பம்பரம் என கிராமத்து நினைவுகளை ஞபாகப்படுத்தும் ஏலே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 26) திரைப்படங்கள்!
நேற்று இப்படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் விஜய்சேதுபதி தன்னுடைய அப்பாவின் அடாவடி குறித்து சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்றும் இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது என்ற அறிவிப்பை படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,"எத்தனை நாட்கள் காத்திருந்திருப்பேன் இதனை உங்களிடம் சேர்க்க, நற்செய்தியை உங்களிடம் சொல்ல!" என்று கூறி படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்