ஆப்நகரம்

ட்விட்டரில் மீண்டும் இணைந்தாரா வடிவேலு? வைரலான கணக்கு பற்றி வந்த விளக்கம்

வடிவேலு மீண்டும் ட்விட்டரில் இணைந்துவிட்டார் என கூறி ஒரு புதிய கணக்கு உலா வந்த நிலையில் அது போலி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 21 Mar 2020, 4:41 pm
காமெடி நடிகர் வடிவேலு தான் இணையத்தில் எப்போதும் பேமஸ். சினிமாவை நடிப்பதை அவர் நிறுத்திவிட்டாலும், தற்போதும் அவரது பழைய புகைப்படங்கள் தான் மீம்களாக இணையத்தில் உலா வருகிறது.
Samayam Tamil Vadivelu


2013ல் தெனாலிராமன், எலி போன்ற படங்கள் ரிலீஸ் ஆனபோது வடிவேலு ட்விட்டரில் கணக்கு துவங்கினர். இயக்குனர் யுவராஜ் தான் அந்த ட்விட்டர் கணக்கை வடிவேலு அனுமதியோடு துவங்கி நிர்வகித்தார். அந்த படங்கள் பற்றிய அப்டேட் மட்டுமே வெளியான நிலையில் அதன்பிறகு பல வருடங்களாக வேறு எந்த பதிவும் வராமல் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று வடிவேலு பெயரில் வேறு ஒரு புதிய கணக்கு துவங்கப்பட்டு இருப்பதாக கூறி இணையத்தில் ஒரு கணக்கு உலா வந்தது. பலரும் வடிவேலு தான் புதிய கணக்கு துவங்கியுள்ளார் என நினைத்து பின்பற்ற ஆரம்பித்தனர். தற்போது வரை 32 ஆயிரம் பேர்பின்தொடர்ந்துள்ளனர்.

"பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு. #PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன்" என அந்த கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

ஆனால் வடிவேலு ட்விட்டரில் இல்லை என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளனர். அப்போது தான் தற்போது வந்துள்ள புதிய கணக்கு போலியானது என தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்