ஆப்நகரம்

Darbar தர்பார் போஸ்டரை வெளியிட்ட லைகா: அப்போ, ட்ரெய்லர் வராதா?

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் தர்பார் படத்தின் புது போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil | 12 Dec 2019, 8:49 am
Samayam Tamil new poster of darbar released on rajinikanths birthday
Darbar தர்பார் போஸ்டரை வெளியிட்ட லைகா: அப்போ, ட்ரெய்லர் வராதா?
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் தர்பார் படத்தின் புது போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் பிறந்தநாள்

சூப்பர் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HBDThalaivarSuperstarRAJINI, #HBDSuperstarRajinikanth ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் பட ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்த்தால் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தர்பார் போஸ்டர்

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது லைகா. ரஜினிக்கு அந்த ஸ்டைலான நடை அழகு என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் அவர் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். ட்ரெய்லரை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும் இதுவாவது வெளியானதே என்று சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

Twitter-Happy Birthday THALAIVAA @rajinikanth 😎🎁🎉🎊 wis...

ட்ரெய்லர்

தர்பார் படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போட்ட ட்வீட்டால் தான் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அவரே இன்னொரு ட்வீட் போட்டு, ட்ரெய்லரை வெளியிடும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறிவிட்டார். அப்படி என்றால் ரஜினி பிறந்தநாளுக்கு ட்ரெய்லர் வராதா என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Twitter-To all the dear Rajini Sir Fans -There is no date ...

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் பெருமை #HBDThalaivarSuperstarRAJINI என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணமும் ரஜினி ரசிகர்கள் தான். அதை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறா்கள். ரஜினிக்கு அவரின் ரசிகர்கள் மட்டும் அல்ல அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter-Thalaivar Bloods ♥️👑🔥 - locked No. 1 (India Tr...

அடுத்த செய்தி

டிரெண்டிங்