ஆப்நகரம்

காலா படத்தை தடைசெய்ய நாடார் சமூகத்தினர் முதல்வரிடம் கோரிக்கை

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் சென்னை நாடார் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 4 Jun 2018, 3:36 pm
சென்னை : ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் சென்னை நாடார் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil kaala


பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என நாடார் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஏன் காலாவை எதிர்க்கிறோம் ;
காலா படத்தை எதிர்ப்பது குறித்து நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கூறியதாவது.

ரஜினிக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பிரச்னை எதுவும் இல்லை. திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று அங்கு வாழும் தமிழர்களுக்கு பல நன்மைகளைச் செய்தவர் கூத்வாலா சேட் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் திரவியம் நாடாருடைய கதையை ரஞ்சித் படமாக எடுத்துள்ளார். இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேறு சமூகத்தை சேர்ந்தவராக காட்டுவது தவறு. இதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

ரஞ்சித் பதில் :
இதுகுறித்து திரவியம் நாடாரின் மகன் ஜவஹர் நாடார், காலா இயக்குனர் பா ரஞ்சித்திடம் விளக்கம் கேட்டபோது மழுப்பலான பதிலை அளித்துள்ளார். அவர் உண்மை கதையை படமாக்கும் போது திரித்துக் கூறாமல் அப்படியே கூற வேண்டும்.

கோரிக்கை மனு:
இப்படத்தின் டிரைலர் வெளியானதன் அடிப்படையிலேயே இப்படத்தை எதிர்க்கிறோம். இயக்குனர் ரஞ்சித் தலித்திய சிந்தனையாளர். நாடாரான ஒருவரை தமிழராக மட்டும் சித்தரித்திருந்தால் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் திரவியம் நாடாரை தலித்தாக காண்பிக்கப்பட்டிருந்தால் எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏற்கனவே வெளியான ரஞ்சித்தின் படம் இதற்கு சான்று.

காலா படத்தில் நாயகனின் நிலை என்ன என்பது ரஜினி தரப்பிலும், காலா படக்குழு தரப்பிலும் உரிய விளக்கம் தர வேண்டும். எங்கள் மனுவை முதலமைச்சருக்கு அளிக்க இருக்கிறோம். காலா படக்குழு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இல்லையெனில் படத்தை ரிலீஸாக விடமாட்டோம் என முத்து ரமேஷ் கூறியுள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்