ஆப்நகரம்

சீக்கிரமே வெளிவரும் நேர்கொண்ட பார்வை: உற்சாகத்தில் தல ரசிகர்கள்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே வெளியாக இருக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Jun 2019, 1:14 pm
தல அஜித்குமார் நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் பிங்க். அந்தப் படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் நேர்கொண்ட பார்வை. முழுக்க பெண்ணியப் படமாக பெண்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசிய படம் தான் பிங்க். முழுக்க பெண்கள் மிக முக்கியப் பாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் அமிதாப் சிறிய நேரமே வரக்கூடிய முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியான ஒரு படத்தில் தமிழின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் நடித்திருப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமே.
Samayam Tamil nkp


இதற்கு முழுக்காரணம் நடிகை ஶ்ரீதேவி தான். ஶ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தது முதல் அஜித்துடன் நல்ல நட்பில் இருந்தவர் ஶ்ரீதேவி. அஜித்தை வைத்து தமிழில் தான் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது அவர் ஆசை. அவர் தான் பிங்க் படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவரது திடீர் மரணத்திற்கு பிறகு போனி கபூர் அஜித்திற்காக பிங்க் படத்தின் உரிமையை தமிழில் வாங்கினார்.

இந்திப்படம் போல் இல்லாமல் தமிழ்ப் படத்தின் அஜித்தின் கேரக்டர் அதிக நேரம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படம் ஆக்‌ஷன் கலந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாபாலன் அஜித் ஜோடியாக நடித்துள்ளார். கல்கி கொச்சிலின், ஸ்ரத்தா ஶ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பாண்டேஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் ரிலீஸ் ஆக்ஸ்ட் 10 என்று முன்பு கூறப்பட்ட நிலையில் படம் முன்னதாக வருவதாக படக்குழு கூறியிருந்தது. படத்தின் ரிலீஸ் எப்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தநிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி நேர் கொண்ட பார்வை ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. இப்போது ஆகஸ்ட் 1 அன்று தியேட்டர் ஒதுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அஜித் ரசிகரக்ளுக்கு பெரிய கொண்டாட்டம காத்திருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்