ஆப்நகரம்

எக்ஸ்பிரஸ் அவென்யுவில் விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை!

‘சீதக்காதி’ படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் கேரக்டரை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் மெழுகு சிலையாக வடிவமைத்துள்ளனர்.

Samayam Tamil 3 Dec 2018, 6:26 pm
விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் பல படங்களில் ஒன்று ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திரு. ஆதிமூலம் ஐயாவின் கேரக்டரில் நடித்துள்ளார். அவரின் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யுவில் அவரது உருவில் மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. இது நடிகர் விஜய்சேதுபதிக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று சிறப்பாகும்.
Samayam Tamil seethakathi


தனது தனித்திறமையின் நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய் சேதுபதி மிக கடின உழைப்பாளி. அதிலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக வந்து உதவி செய்வதில் மிகுந்த நாட்டுப் பற்று உள்ளவர் என்றே கூறலாம்.

‘சீதக்காதி’ படத்தில் திரு.ஆதிமூலம் ஐயா கேரக்டராகவே நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதன் முறையாக மெழுகுசிலை அமைக்கப்பட்டது நடிகர் விஜய்சேதுபதிக்குத்தான். நாம் எல்லோரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் தலைநிமிர்ந்து நிற்கிறார் விஜய் சேதுபதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்