ஆப்நகரம்

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் : நிவேதா பெத்துராஜ்!

பிரபல தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ், லைகா தயாரிப்பில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 29 Apr 2019, 4:09 pm

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நயன்தாரா உட்பட பலர் இணைந்து நடிக்கின்றனர்.
Samayam Tamil nivetha-pethuraj


இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜும் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை நிவேதா, ரஜினியின் மகளாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்தை ‘துருவங்கள் 16’, ‘நரகாசுரன்’ படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார்.

நிவேதா பெத்துராஜ் அணிந்திருக்கும் உடையைப் பார்த்து பாராட்டும் ரசிகர்கள்!

வித்தியாசமான உடையில் காட்சிளிக்கும் நிவேதா பெத்துராஜ்!

இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது இதனால் ஒரே நேரத்தில் லைகா தயாரிக்கும் இரண்டு முக்கிய படங்களில் நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

டிரெண்டிங்