ஆப்நகரம்

நடிப்புக்கு முழுக்குப் போட்ட விஜய்பட நடிகை!

விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நிவேதா தாமஸ், சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார்

TNN 2 Jan 2018, 5:24 pm
விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நிவேதா தாமஸ், சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார்.
Samayam Tamil nivetha thomas is now keen on completing her studies more than doing films
நடிப்புக்கு முழுக்குப் போட்ட விஜய்பட நடிகை!


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு ஹீரோயினாக மாறியவர் நிவேதா தாமஸ். இவர் விஜய்யுடன் சேர்ந்து ‘ஜில்லா’ படத்தில் நடித்ததன் மூலம் நன்கு பிரபலமானார். அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் இவருக்கு தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது.

இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் சிறிது காலம் படங்கள் எதிலும் நடிக்கப் போவதில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. நிவேதா தாமஸ் நடிப்புக்கு செலுத்தும் கவனத்தை படிப்பிலும் செலுத்த வேண்டும் என்பதற்காக அவரது
பெற்றோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆர்க்கிடெக் படிக்கும் நிவேதா தாமஸ், தேர்வுகள் நெருங்குவதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தேர்வுகள் முடிந்ததும் மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்