ஆப்நகரம்

தமிழில் அதிக படங்களில் நடிக்கவிருக்கும் நிவின்பாலி!

அடுத்த ஆண்டு மட்டும் நிவின்பாலி தமிழில் 6 படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 23 Nov 2016, 3:27 pm
அடுத்த ஆண்டு மட்டும் நிவின்பாலி தமிழில் 6 படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil nivin pauly committed more tamil films
தமிழில் அதிக படங்களில் நடிக்கவிருக்கும் நிவின்பாலி!


மலையாள சினிமாவில் தனக்கென நிலையான மார்க்கெட்டை வைத்திருப்பவர் நடிகர் நிவின்பாலி. இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் என்றும், மேலும் ரசிகர்களுக்கு இவர் ராசியான ஹீரோ என்று பெயர் எடுத்துவிட்டார். நடிகர் நிவின்பாலி கடந்த வருடங்களில், வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது தனது படங்களை தேர்ந்தெடுப்பதிலும், நடிப்பதிலும் நிதானத்தை கடைபிடித்து வருகிறார். அதனால் தான் இந்த வருடத்தில் அவர் நடித்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின.. இந்த இரண்டு படங்களுமே 100 நாட்களை தாண்டி வசூல் சாதனை புரிந்தது.

மலையாளத்தில் தற்போது மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவின்பாலி, தமிழில் அடுத்த ஆண்டு 2017க்குள் ஆறு படங்களில் நடித்து வெளியிட திட்டம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தமிழில் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக டைரக்டர் அட்லி தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சூர்யா பாலகுமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுதவிர இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கத்தில் தெலுங்குப்படத்தின் ரீமேக்கில் தமிழில் நிவின்பாலியை நடிக்கவைக்க முயற்சி நடப்பதாகவும் தெரிகிறது. ஆக மொத்தம் தமிழில் நிவின்பாலியின் பட எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்