ஆப்நகரம்

'குட் டச்', 'பேட் டச்': வைரலாகும் நிவின் பாலியின் விழிப்புணர்வு வீடியோ

மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் இருந்து குழந்தைகள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

TNN 26 Apr 2017, 12:06 pm
சென்னை: மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் இருந்து குழந்தைகள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil no go tell watch actor nivin pauly talk to children about child body safety
'குட் டச்', 'பேட் டச்': வைரலாகும் நிவின் பாலியின் விழிப்புணர்வு வீடியோ


கேரளா அரசின் சார்பில் கேரள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வீடியோவில், 'குட் டச்', 'பேட் டச்' குறித்த வித்தியாசங்களை, குழந்தைகளின் அபிமான நடிகரான நிவின் பாலி கற்பிக்கிறார். 'நோ கோ டெல்(NO.GO.TELL) என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் வீடியோ மூலம் குழந்தைகள் தங்களது உடம்பில் உள்ள அந்தரங்க பகுதிகளில் தவறாக ஒருவர் தொட்டால் அதற்கு எப்படி விரைந்து செயலல்ப்பட வேண்டும் எனவும் நிவின் பாலி விளக்கியுள்ளார்.

இந்த வீடியோ குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெளியாகியிருப்பதால், இதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், அது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை கிடைக்கிறது.

"No, Go, Tell." These are three words that a group against child abuse is hoping every child will learn in order to tackle the dangers leading to child sexual abuse.

அடுத்த செய்தி

டிரெண்டிங்