ஆப்நகரம்

கணவருக்கும், எனக்கும் இடையே பிரச்சனையா?: சுப்ரமணியபுரம் ஸ்வாதி விளக்கம்

தனது கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார் ஸ்வாதி. அவ்வாறு செய்தது ஏன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 19 Apr 2020, 4:15 pm
சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் திரையலகில் அறிமுகமாக பிரபலமானவர் ஸ்வாதி ரெட்டி. இன்று அவர் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil swathi reddy


இந்நிலையில் ஸ்வாதிக்கும், அவரின் காதலர் கணவரான விமானி விகாஸ் வாசுவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியுள்ளது. ஸ்வாதி தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வந்தார். இந்நிலையில் அவர் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கிவிட்டார்.

இதை பார்த்துவிட்டு தான் கணவருக்கும், ஸ்வாதிக்கும் இடையே பிரச்சனை போன்று என ரசிகர்கள் பேசத் துவங்கினார்கள். இதை பார்த்த ஸ்வாதி வீடியோ ஒன்றை வெளியிட்டு தேவையில்லாத பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள ஸ்வாதி தன் திருமண வாழ்க்கையை பிரைவேட்டாக வைக்கத் தான் அந்த புகைப்படங்களை நீக்கியதாகவும், ‘Archives’ ஃபோல்டரில் அவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு பிரைவசி தேவைப்படுவதால் தான் டைம்லைனில் இருந்து சில புகைப்படங்களை மறைக்க முடிவு செய்ததாக ஸ்வாதி விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்வாதி விளக்கம் அளித்துமே ஏதோ பிரச்சனை போன்று, அதனால் தான் சமாளிக்கிறார் என்று வீட்டில் சும்மா இருப்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஸ்வாதி திருச்சூர் பூரம் என்கிற மலையாள படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

மகத் பொண்டாட்டி பிராச்சி சொன்னது மாதிரியே நடந்துடுச்சே!

அடுத்த செய்தி

டிரெண்டிங்