ஆப்நகரம்

மாஸ்டர் படத்தில் அது நிச்சயம் இருக்காது: இயக்குனர் ரத்னகுமார் விளக்கம்

விஜய்யின் முந்தைய படங்களை போல மாஸ்டர் படத்தில் அரசியல் கருத்துகள் இருக்குமா என்ற கேள்விக்கு இயக்குனர் ரத்னகுமார் விளக்கம் அளித்துள்ளார் .

Samayam Tamil 7 May 2020, 12:34 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Vijay in Master


ஏப்ரல் மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் முழு அடைப்பு காரணாமாக படம் ரிலீஸ் ஆகவில்லை. புதிய ரிலீஸ் தேதி என்ன என்பது நிலைமை சீராகி தியேட்டர்கள் திறந்தபிறகு தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. மேலும் ட்ரைலருக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் லோகேஷ் உடன் பணியாற்றியுள்ள ஆடை புகழ் இயக்குனர் ரத்னகுமார் அளித்துள்ள பேட்டியில் மாஸ்டர் பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் முந்தைய படங்களில் அதிக அளவில் அரசியல் கருத்துகள் இருக்கும், அது போல மாஸ்டர் படத்திலும் அரசியல் இருக்குமா என்ற கேள்விக்கு பதில் கூறிய அவர், 'இது நிச்சயம் ஒரு சமூக பொறுப்புள்ள படம், ஆனால் ஹீரோ நீண்ட நேரம் பேசும்படி monologue காட்சிகள் எதுவும் இருக்காது' என ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

கத்தி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட நடிகர் விஜய்யின் முந்தைய படங்களில் அதிக அளவில் அரசியல் கருத்துகள் மற்றும் சமூகத்திற்கு அறிவுரை சொல்லும் விதத்தில் விஜய் பேசுவது போல காட்சிகள் இருக்கும். குறிப்பாக கத்தி படத்தில் விஜய் பிரெஸ் மீட் வைத்து ஆக்ரோஷமாக பேசி இருப்பார்.

அது போன்ற காட்சிகள் மாஸ்டர் படத்தில் இருக்காது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்